இரவு 10 மணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கம்; தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: சோதனை சாவடிகள் அமைத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

இரவு 10 மணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கம்; தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: சோதனை சாவடிகள் அமைத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
Updated on
2 min read

கரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று இரவு 10 மணிமுதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. வெளிமாவட்டம், உள்ளூர் பேருந்துகள் பகலில் மட்டுமே இயக்கப்பட்டன. இர வில், முக்கிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. உயிரிழப்பும் அதிகரிப்பதால், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முதல் நாளான நேற்று இரவு10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாவட்ட பேருந்துகள் காலை முதல் மாலை வரை மட்டுமே இயக்கப்பட்டன. தூரம், பயண நேரத்தை கணக்கிட்டு தேவையான அளவு பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக் கின. குறைந்த அளவில் ஆம்னிபேருந்துகளும் இயங்கின. இரவு 10 மணிக்குள் சேரவேண்டிய இடத்துக்கு சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது.

அதேநேரம், ரயில் சேவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இரவு 10 முதல் அதிகாலை 4 மணிக்குள் வரும் ரயில்களின் பயணிகள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல தேவையான வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை, தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள் மூடல்

மாநிலம் முழுவதும் சுற்றுலாத்தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், உயிரின பூங்காக்கள் என அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டன. டாஸ்மாக் மதுபானக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கின. மாலை 6 முதல்8 மணி வரை டோக் கன் வழங்கப்பட்டு, 9 மணி வரை மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டன.

பொதுமக்கள் தேவையின்றிவெளியில் சுற்றுவதை தடுக்க, சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள், மாவட்டத்துக்குள் முக்கியமான சந்திப்புகளில் நேற்று இரவு முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊர டங்கு அமல்படுத்தப்படும் எனஅரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு விலக்கு யாருக்கு?

இரவு நேர ஊரடங்கு மற்றும்ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் எந்தெந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தொலைதொடர்பு நடவடிக்கைகள், தகவல் தொடர்பு, தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவன பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து செயல்படுதல், மருத்துவம், நிதி, போக்குவரத்து மற்றும் பிற முக்கியமான சேவைகளின் பின்தள செயல்பாடுகளுக்காக தரவு மையங்கள், ஐடிகட்டமைப்பு பராமரிப்பு செயல்பாடுகள், பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் சேமித்தல் உள்ளிட்ட கிடங்கு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தீ, இயந்திரம், தொழிலாளர் பாது காப்பு நோக்கங்களுக்கான அத்தியாவசிய பராமரிப்புக்கு ஞாயிறு முழு ஊரடங்கில் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு என்பதில்மருந்துகள், மருந்துருவாக்கிகள், துப்புரவு பொருட்கள், ஆக்ஸிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி, மூலப் பொருட்கள் ஆகியவற்றுக்கான உற்பத்தி அலகுகள், கால்நடைகளுக்கான உணவு பதப்படுத்தும் தொழில்கள், உரம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்தி அலகுகள், ஏற்றுமதி நிறுவனங்கள், வேளாண்மை, சுகாதாரத் துறை வாகன உற்பத்தி, இவற்றுக்கான பேக்கேஜிங் நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

தொடர் செயல்முறை தொழிற்சாலைகளை பொறுத்தவரை சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய இரும்பு, சிமென்ட் ஆலைகள், பெயின்ட் உள்ளிட்ட வேதியியல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், உரத் தயாரிப்பு, கைபேசி மற்றும் நுகர்வோர் மின் னணு தயாரிப்பு ஆலைகள், ஆட்டோ மொபைல் உற்பத்தி ஆலைகள், பெரிய ஜவுளி தொழிற்சாலைகள் ஆகியவை அடங்கும்.

இந்த அனைத்து ஆலைகளும், சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், பணியாளர்சுகாதார கண்காணிப்பு, தடுப்பூசிபோடுதல் போன்றவற்றை உறுதியாக கடைபிடிக்க வேண் டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in