கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம்

தமிழக காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்தார். உடன் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் கலீல் ரஹ்மான்  உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன்
தமிழக காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்தார். உடன் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி தமிழககாங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில்அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்தார். காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிசசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கோவிட் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டுஅவர்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்வார்கள். சசிகாந்த்செந்தில், டாக்டர் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோர் இப்பணியை ஒருங்கிணைப்பார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 98844 66333 என்ற எண் மூலம்கோவிட் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

தட்டுப்பாடின்றி தடுப்பூசி விநியோகம், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி உள்ளிட்ட மன்மோகன் சிங் முன்வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அவர் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் மோடி அரசு செயல்படுத்த வேண்டும்.

135 கோடி மக்கள் வாழ்கிற இந்திய நாட்டில் 10 சதவீதம் பேருக்குக் கூடதடுப்பூசி போடப்படாதது அதிர்ச்சிஅளிக்கிறது. உள்நாட்டு தயாரிப்புமூலமாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தோஇந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in