சட்டவிரோத நியமனங்கள்: டாஸ்மாக் மண்டல மேலாளர், அமைச்சர் உதவியாளர் மீது புகார் - லஞ்ச ஒழிப்பு இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சட்டவிரோத நியமனங்கள்: டாஸ்மாக் மண்டல மேலாளர், அமைச்சர் உதவியாளர் மீது புகார் - லஞ்ச ஒழிப்பு இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதனுக்குத் தெரியாமல், போலியாக பரிந் துரைக் கடிதம் தயாரித்து டாஸ் மாக்கில் சட்டவிரோதமாகப் பணி நியமனம், இடமாறுதல் அளித்தது தொடர்பாக அமைச்சரின் நேர்முக உதவியாளர், மதுரை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்பு இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை டாஸ்மாக் மேற்பார் வையாளர் பி.செல்வம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது:

மதுரை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் எஸ். தனபால், அவரது உதவியாளர் எம்.ரவி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் எஸ். சரவணகுமார், பி.கனகராஜ், கே.எஸ்.கதிரவன், விற்பனையா ளர் முத்துப்பாண்டி ஆகியோர் கூட்டு சேர்ந்து, டாஸ்மாக்கில் சட்டவிரோதமாகப் பணி நியமனம், இடமாறுதல்களை வழங்கி வரு கின்றனர்.

இவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு டாஸ்மாக்கில் ஏற் கெனவே பணிபுரிந்து முறைகேடு காரணமாக நடவடிக்கைக்கு உள் ளான ஊழியர்களுக்கு விதி களுக்கு எதிராக பணி நியமனம் வழங்குகின்றனர். சட்டவிரோத மாக பணி நியமனம் செய்யப் பட்டவர்களிடம் இருந்து டாஸ் மாக் முதுநிலை மேலாளர் தலை மையிலான குழுவினர் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர்.

இந்த முறைகேட்டில் அமைச்சர் நந்தம் இரா.விசுவநாதனின் நேர்முக உதவியாளர் செந்திலுக் கும் தொடர்புள்ளது. அமைச்சருக் குத் தெரியாமல் அவரது உதவி யாளர் செந்தில் மூலமாக, குறுக்கு வழியில் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று, அதன் அடிப்படையில் நியமனம் மற்றும் இடமாறுதல்கள் நடைபெறுகின்றன.

மதுரை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலியிடங்கள் ஏற்படு வதைக் கண்காணித்து, குற்றச்சாட் டுகளுக்கு ஆளானவர்களிடம் லஞ் சம் வாங்கிக்கொண்டு, அந்த இடங்களில் ஆட்களை நியமிக்கின் றனர். தமிழகம் முழுவதும் இந்த மோசடி நடைபெற்று வரு கிறது. இதனால் கோடிக்கணக் கான ரூபாய் லஞ்சம் வசூலிக் கப்படுகிறது.

இதுதொடர்பாக டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் எஸ்.தனபால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு 3.10.2015-ல் மனு அளித்தேன்.

அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஜனவரி 5-ல் விசாரணை

இந்த மனு நீதிபதி எம்.வேணு கோபால் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.சதீஷ் பாபு வாதிட்டார். மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன.5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in