கரோனா தொற்றால் இரவு நேர ஊரடங்கு: விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு மாலை 6.30-க்கு கடைசிப் பேருந்து
கரோனா தொற்று பாதிப்பு மீண்டும்அதிகரித்து வரும் நிலையில் நேற்று முதல் பொது போக்குவரத்தை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (விழுப்புரம் கோட்டம்) சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) கிளைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்து, ஊரடங்கு விதிகளின்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இயங்காது, அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஊர்வாரியாக செல்லும் கடைசி பேருந்து நேர விவரம் பொதுமக்கள் அறியும் வண்ணம் பேருந்து நிலையங்களில் அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொலை தூரம் செல் லும் பயணிகள் இரவு 10 மணிக்குள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்ல, முன்கூட்டியே பயண நேரத்தை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பயணிகள் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்கஅனுமதிக்கப்படுவர்
விழுப்புரம் பேருந்து நிலை யத்தில் இருந்து புறப்படும் கடைசிபேருந்துகள். ஊர்களின் பெயர்கள் வருமாறு: சென்னைக்கு மாலை - 6.30, திருச்சி- மாலை 6 .30, காஞ்சிபுரம் - 6.30,வேலூர் - மாலை 6.40, கள்ளக் குறிச்சி - இரவு 8.00, புதுச்சேரி - இரவு8.00, கடலூர் - இரவு 8.30, திருவண் ணாமலை - இரவு 8.30, செஞ்சி - இரவு 9.00, உளுந்தூர்பேட்டை - இரவு 9,00. விழுப்புரத்தில் இருந்துசெல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று பயணம்செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
