

புதுச்சேரியில் உள்ள கூத்தாண் டவர் கோயில் திருவிழா இரண்டாம் ஆண்டாக கரோனாவால் ரத்தானது.
விழுப்புரம் மாவடத்தில் உள்ள கூவாகம் போல் புதுச் சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு இங்கு கூத்தாண்டர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
தற்போது கரோனா 2-ம் அலை காரணமாக நடப்பாண்டும் கூத்தாண்டவர் திருவிழாவை கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் தரணி கூறுகையில், “புதுச்சேரி கூத்தாண்டவர் கோயிலில் நடக்கும் திருவிழாவுக்கு மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருநங்கையர் பெரும் அளவில் பங்கேற் பார்கள்.
கரோனாவால் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக கூத்தாண்டர் திருவிழா ரத்தாகியுள்ளது.
கொடியேற்றதுடன் செவ்வா யன்று விழா தொடங்கி வரும் 27, 28-ம் தேதிகளில் சிறப்பு நிகழ்வுகள் நடப்பதாக இருந்தது. கரோனா இரண்டாம் அலையால் விழாவை ரத்து செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.