செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: சாத்தான்குளத்தில் திடீர் போராட்டம்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: சாத்தான்குளத்தில் திடீர் போராட்டம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு அழகம்மன் கோயில்தெருவில் காலியாக உள்ள இடத்தில், தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். அப்பகுதி மக்கள் நேற்று அங்கு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலைந்து சென்றனர்.

நாகர்கோவில்

குளச்சலை அடுத்துள்ள ஆனைக்குழி நெசவாளர் தெருவில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. அங்கு குடியிருப்புகள் இருப்பதாகக் கூறி, செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த 12-ம் தேதி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால், அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதைக் கண்டித்து அப்பகுதிமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளச்சல் போலீஸார் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். செல்போன் கோபுரம் அமைக்கும் பணிநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in