Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

ஆம்பூர் அருகே ஒற்றை யானையால் உறக்கத்தை இழந்த விவசாயிகள்

ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் ஒற்றை யானையால் சேதமான வாழை தோட்டம்

ஆம்பூர்

ஆம்பூர் பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விளைப் பொருட்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால், விவ சாயிகள் உறக்கத்தை இழந்து யானையை விரட்ட அவரவர் நிலங்களில் காவல் காத்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஆம்பூர் அடுத்த பொன்னப்பல்லி, பாலூர், கொத்தூர், சாரங்கல், ஓணாங்குட்டை, மாச்சம்பட்டு, ரெட்டிக்கிணறு ஆகிய கிராமங் களையொட்டியுள்ள விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

ஒற்றை யானையால் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விளைப்பொருட்கள் சேதமடைந் துள்ளதால் யானையை விரட்ட வனச்சரகர் மூர்த்தி தலைமை யிலான வனத்துறையினர் ரால கொத்தூர், பொன்னப்பல்லி, பைரப்பள்ளி கிராமங்களில் முகாமிட்டு யானையை கண் காணித்து வருகின்றனர்.

வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் கண்ணில் மண்ணை தூவிய ஒற்றை யானை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்க மடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்துக்குள் நேற்று அதிகாலை நுழைந்த யானை, விவசாயி துளசிராமன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் வாழை மரங்களை வேரோடு பிடிங்கி வீசின.

பிறகு, அருகேயிருந்த விவசாயி ஜனார்த்தனன் என்ப வரது நிலத்துக்கு சென்றது. அங்கு யானைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க ஜனார்த்தனன் நிலத்தை சுற்றி தடுப்புகம்பிகள் அமைத்திருந்தார். இதை பிடிங்கி வீசிய ஒற்றை யானை அந்த நிலத்துக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்ட விளைப்பொருட்களை சேதப் படுத்தின. யானை பிளிறும் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்றனர். பிறகு, பட்டாசு வெடித்து, மேள,தாளம் வாசித்து யானைடியை விரட்டியடித்தனர்.

பகல் நேரங்களில் யானையால் சேதமான இடங்களை பார்வையிட வரும் வனத்துறையினர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு செல்வதாகவும், இரவு நேரங்களில் யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிப்பது இல்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

இதனால், ஒற்றை யானையிடம் இருந்து பயிர் வகைகளை பாதுகாக்க விவசாயிகளே இரவு நேரங்களில் அவரவர் நிலங்களில் காவலுக்கு நிற்பது என முடிவு செய்த விவசாயிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், யானையால் சேதமான பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x