விருத்தாசலம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியால் சர்ச்சை

விருத்தாசலம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியால் சர்ச்சை
Updated on
1 min read

விருத்தாச்சலம், திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு பெட்டிகள் வைத்துள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகில் கண்டெய்னர் வாகனம்‌ நேற்று மாலை முதல் நின்று கொண்டிருந்தது.

இதைக் கண்ட திமுகவினர், அந்த வாகனம் அருகில் சென்று விசாரித்தபோது, உடனடியாக லாரி ஓட்டுநர் லாரியை அங்கிருந்து நகர்த்தியுள்ளார். இருப்பினும் லாரியை மடக்கிய திமுகவினர், கண்டெய்னர் உள்ளே என்ன இருக்கிறது எனக் கேட்டு லாரியை நகர்த்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கண்டெய்னர் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவேண்டும் என வலியுறுத்தி லாரியை நகர விடாமல் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் லாரியை மறித்து நிறுத்தி வைத்துள்ளனர்.

இதையறிந்த கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, விருத்தாசலம் செல்ல ஆயத்தமாகி வருகிறார்.

இதுதொடர்பாக லாரி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, சென்னையிலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு, ஈரோட்டில் இறக்கி வைத்துவிட்டு, மீண்டும் சென்னை செல்ல திட்டமிட்டிருந்தேன்.

செல்லும் வழியில் விருத்தாசலத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு செல்லலாம் என வந்தேன். வந்த இடத்தில் இது போன்று பிரச்சனையாகி விட்டது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in