

இம்முறை, தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயம் எதிர்பார்த்த அளவுக்கு தனக்குக் கைகொடுக்கவில்லை என ஏக வருத்தத்தில் இருக்கும் ஓபிஎஸ், தேவேந்திர குல மக்கள் தனக்கு பெருவாரியாகக் கைகொடுத்திருப்பதாக வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிந்து கொண்டாராம். அதனால், வாக்குப் பதிவு முடிந்த பிறகும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு எக்ஸ்ட்ரா கவனிப்புகளை நடத்தியதாம் ஓபிஎஸ் தரப்பு. தனது போடி தொகுதியில் தேவேந்திர குல சமூகத்து மக்கள் அதிகமாக வசிக்கும் கோட்டூர் கிராமத்துக்கு நேரில் சென்று நன்றியும் சொன்ன ஓபிஎஸ், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தாராம்.