காரில் முகக்கவசம் அணியாமல் சென்ற மருத்துவ தம்பதிக்கு ரூ.500 அபராதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வேலூரில் காரில் பயணித்த மருத்துவ தம்பதியினர் முகக் கவசம் அணியாமல் சென்றதால் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப் படுத்த கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொது இடங்களில் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதுடன் இரு சக்கர மற்றும் கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர் களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி, நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.200, கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் அண்ணா சாலையில் சிஎஸ்ஐ பேராலயம் அருகே மாநகராட்சி ஆணையர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை முகக்கவசம் அணியாதவர்கள் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, கார் ஒன்றை அதிகாரிகள் நிறுத்தினர். காரில் இருந்த தம்பதி யினர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை, முகக்கவசம் அணியுமாறு அதி காரிகள் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள் தாங்கள் இருவரும் மருத்துவர்கள் என்றும், காருக்குள் இருக்கும்போது முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரில் செல்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவை அவர்களிடம் மாநகராட்சி ஆணை யர் சங்கரன் காண்பித்தார்.

மேலும், அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அபராதத் தொகையை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in