Last Updated : 19 Apr, 2021 05:19 PM

 

Published : 19 Apr 2021 05:19 PM
Last Updated : 19 Apr 2021 05:19 PM

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

பக்தர்கள் இல்லாமல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை நடத்தக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண் போத்திராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு

தமிழகத்தில் கரோனா பரவலை காரணம் காட்டி திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் 50 சதவீத ஆட்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவிழாக்களுக்கு மட்டும் முழுமையாக தடை விதிப்பது சரியல்ல.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை பக்தர்கள் இல்லாமல் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம்.

எனவே, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்கு அனுமதி வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x