

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வடமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங் கள் குடும்பத்தினருடன் பல கி.மீ. நடந்தே சென்றனர். இந்த அனுபவத்தால் வடமாநில தொழி லாளர்களில் சிலர் தற்போதே சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பிஹார், லக்னோ, அகமதாபாத், ஹவுரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதி காரிகள் கூறும்போது, ‘‘தமிழகத் தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டுமானப் பணி களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் வடமாநிலத் தொழிலாளர்களிடம் நிலவுகிறது. இதனால் அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். ஆனால், பெரிய அளவில் செல்வதாக தெரியவில்லை’’ என்றனர்.
இதனிடையே ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் செயல் படும் தனியார் தொழிற்சாலையில் வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர் களில் சிலருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டதால் அனை வருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 69 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து அவர்கள் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலையை சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைக் கண்டித்து கடை உரிமை யாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். கடைக்காரர்களுக்கு மேற்கொள் ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் வந்ததும், கடைகள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.