

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தகர் பிரிவு காங்கிரஸ் சார்பாகவும், வசந்த் அன் கோ சார்பாகவும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக வர்த்தகர் பிரிவு காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சைதாப்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 4 நாட்களாக கோதுமை மாவு, ரவை, பிஸ்கெட்டுகள், பால், உணவு, கொசு வர்த்தி சுருள், நோய் தடுப்பு மருந்துகள், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
காவேரி நகர் பகுதியில் 15 ஆயிரம் போர்வைகள், பாய்கள் வழங்கப்பட்டன. அதே பகுதியில் வசந்த் அன் கோ காட்சியகம் முன்பாக வர்த்தக காங்கிரஸ் மற்றும் வெற்றி பவுண்டேஷன் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது ஏராளமானோருக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
காவேரி நகர், ரயில்வே பார்டர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் வசந்த் அன் கோ கார்ப்பரேட் அலுவலகத்தில் தங்கவைக்கப் பட்டு அவர்களின் அன்றாட தேவைகள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.