Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

பெரிய மாநிலங்களை 2, 3 ஆக பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை

பெரிய மாநிலங்களை 2, 3 ஆகபிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தமிழகத்தைக்கூட 3 ஆக பிரிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

தேர்தல் முடிவை தெரிந்துகொள்வதற்கான காத்திருப்பு மிக நீண்டநெடியதாக உள்ளது. ஆனாலும்,ஜனநாயகத்தின் தன்மைகளைகாப்பாற்ற தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி பார்த்தால் இந்த காத்திருப்பு தவிர்க்க முடியாதது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 404 தொகுதிகள் கொண்ட3 மாநிலங்களிலும் ஒரே நாளில்அமைதியாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இவை அமைதியான மாநிலங்கள். ஆனால், 126தொகுதிகள் கொண்ட அசாமில் 3 கட்டங்களாகவும், தமிழகத்தைவிட சற்று அதிகமாக 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவுகள் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணம் அங்கு நிலவும் தீவிரவாதமும், அமைதியின்மையும்தான். அதற்குகாரணம் அங்கு நிலவும் வளர்ச்சியின்மையே.

பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பை சிறப்பாக நிர்வகிக்க முடியாததே இதற்கு காரணம். மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 10 கோடி. அந்த மாநிலத்தை3 ஆக பிரித்து மேற்குவங்கம், கூர்க்காலாந்து, காம்தாப்பூர் ஆகியமாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மேற்கு வங்க மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகும். இதேபோல, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.

புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது நிச்சயம் நல்லதுதான். கடந்த 2000-ல் பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியமாநிலங்களைப் பிரித்து ஜார்க்கண்ட், உத்தராகண்ட், சத்தீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக பிரிக்கப்பட்ட 3 மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களைவிட அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. 2014-ல் பிரிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானா போட்டி போட்டு வளர்ச்சியடைந்து வருகின்றன.

எனவே, மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிகவும் நல்லது. அது வளர்ச்சிக்கு நிச்சயம் வழி வகுக்கும். தமிழகத்தில்கூட சென்னை, கோவைக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்றுஅங்கு உள்ளவர்களும், கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். சிறியவையே அழகானவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x