கிரிஜா வைத்தியநாதன் வடக்கு அல்லது மேற்கு மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு நியமிக்க வேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

கிரிஜா வைத்தியநாதன் வடக்கு அல்லது மேற்கு மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு நியமிக்க வேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்
Updated on
1 min read

முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை வடக்கு அல்லது மேற்கு மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு நியமிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத் துவ உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒன்பது மாதங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளரா கவும், 19 மாதங்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும், சுகாதாரத் துறைச் செயலாளராகவும் பணி யாற்றியதை கருத்தில்கொண்டு, கிரிஜா வைத்தியநாதன் பசுமைதீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தகுதி பெறுகிறார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

வேதனை அளிக்கும் உத்தரவு

அரசு நிர்வாக ரீதியிலான பொறுப்புகளை கவனித்ததால் மட்டுமே அவரை நிபுணத்துவம் பெற்றவராக கருத முடியாது என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது வேதனை தருகிறது.

நிர்வாக ரீதியாக பெற்ற அனுபவத்தை நிபுணத்துவமாகக் கருதுவது, யார் வேண்டுமென்றாலும் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும்.

இச்சூழலில் பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கிரிஜா வைத்தியநாதன் நிபுணத்துவ உறுப்பினராக பொறுப்பேற்றால், அவர் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தொடரப்படும் வழக்குகள் குறித்து முடிவு செய்யும் நிலை அவருக்கு ஏற்படும். இது அறநெறி முறைகளுக்கு முரணாக அமையும்.

எனவே, கிரிஜா வைத்திய நாதனை வட மண்டல அல்லது மேற்கு மண்டல அமர்வில் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in