

கரோனா தொற்று பாதிப்பால் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சென்னை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல் (57). கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். இதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த 9-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சக்திவேல் நேற்று காலை 11.45 மணி அளவில் உயிரிழந்தார். இது போலீஸார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலமான சக்திவேல் 1984-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் என போலீஸார் தெரிவித்தனர்.
கரோனா தடுப்பு, விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்மிகுந்த கவனம், முன்னெச்சரிக் கையுடன் இருக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர்மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.