மானாமதுரை அருகே கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகிய 100 நெல் மூட்டைகள்

மானாமதுரை அருகே கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகிய 100 நெல் மூட்டைகள்
Updated on
1 min read

மானாமதுரை அருகே மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந் தன.

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் முப்பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. பல கொள்முதல் நிலையங்களில் சேமிப்புக் கிடங்குகள் இல்லா ததால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மட்டுமே தார்பாய் மூலம் மூடி வைத்திருந்தனர்.

மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நூறுக்கும் மேற்பட்ட மூட்டைகள் தார் பாயால் போர்த்தி வைக்காமல் திறந்தவெளியில் அடுக்கி வைக் கப்பட்டிருந்தன.

சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து வீணாகின. தற்போது அந்த மூட்டைகளைப் பரப்பிக் காயவைத்து வருகின் றனர். இதேபோல் மாவட்டத் தில் பல இடங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கொள்முதல் நிலையங்களில் சேமிப்புக் கிடங்கு இல்லாதது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் எடுத்துச் செல்லாதது போன்ற காரணங்களால் மழையில் நெல் மூட்டைகள் வீணாகி வருகின்றன.

தார் பாயால் மூடியிருந்தால்கூட நெல் மூட்டைகள் நனைந்தி ருக்காது. பல லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்த நெல்லை இப்படி வீணாக்கி வருகின்றனர், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in