Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

காரைக்குடி அருகே போதிய பேருந்து இல்லாமல் 20 கிராம மக்கள் திண்டாட்டம்: கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தல்

காரைக்குடி அருகே ஏம்பல் சாலையில் இறங்கி நடந்தே பெரியகோட்டை செல்லும் கிராம மக்கள்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 2.5 கி.மீ. நடந்து செல்லும் அவல நிலை தொடர் கிறது.

காரைக்குடி அருகே பெரிய கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆவத்தான் குடி யிருப்பு, கருத்தாண்டி குடி யிருப்பு, காந்தி நகர், வேளார் குடியிருப்பு, பழங் குடியிருப்பு, வடக்கி வளவு, வளைய வளவு, கோனார் குடியிருப்பு, சோழன் குடியிருப்பு, மண்குண்டு கரை, பட்டிராமன் கொல்லை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

மேலும் பெரியகோட்டையில் ஏராளமானோர் குடிசைத் தொழி லாகப் பூக்கட்டும் தொழிலைச் செய்து வருகின்றனர். அவர்கள் காலையில் மதுரையில் பூக்களை வாங்கி வந்து, அவற்றைக் கட்டி காரைக்குடி, புதுவயல், கோட்டை யூர் உள்ளிட்ட பகுதிகளில் விற் பனை செய்கின்றனர்.

அதேபோல் இப்பகுதிகளில் கத்தரி, வெண்டை போன்ற தோட்டக் கலைப் பயிர்களும் அதிக ளவில் விளைகின்றன. அவற்றை விவசாயிகள் காரைக்குடி, புது வயல், கோட்டையூர் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அடிக்கடி வெளியூர் சென்று வருகின்றனர்.

ஆனால், பெரியகோட்டைக்கு காலை, மாலை என இரு வேளை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் இப் பகுதி மக்கள் 2.5 கி.மீ. நடந்து சென்று ஏம்பல் சாலையில் பேருந்து ஏறிச் செல்கின்றனர். எனவே, பெரியகோட்டைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெரிய கோட்டையைச் சேர்ந்த முருகேசன் கூறியதாவது:

சுற்றிலும் உள்ள 20 கிராமங் களைச் சேர்ந்த மக்கள் பெரிய கோட்டைக்கு வந்துதான் வெளியூர் செல்ல வேண்டும். காலையில் இருந்து மாலை வரை தினமும் ஏராளமானோர் வியாபாரம், வேலைக்காக இப்பகுதியில் இருந்து வெளியூர் சென்று வருகின் றனர். எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் ஏம்பல் சாலையில் இறங்கித்தான் நடந்து வர வேண்டியுள்ளது. இதனால் எங்கள் பகுதிக்கு கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x