

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டுள் ளதால், பேன்ஸி, சிறுவர்கள் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே அறிவொளி நகரில் 100 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள், கோயில் திருவிழாக் கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பெண்களுக்கான பாசி, வளையல் உள்ளிட்ட பேன்ஸி பொருட்கள், சிறுவர்களுக்கான பலூன், கார் உள்ளிட்ட விளை யாட்டுப் பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், கரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவ தால், முன்னெச்சரிக்கையாக கோயில்களில் திருவிழா நடத்தவும், மதக் கூட்டங்கள் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது.
திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டதால், திருவிழாக் களில் பேன்ஸி, பலூன், சிறுவர்கள் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த நரிக்குறவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வார வட்டிக்கு நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும் தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அறிவொளி நகரைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கூறியது:
அறிவொளி நகரில் உள்ள 100 குடும்பத்தினரும் கோயில் கோயிலாக சென்று தரைக்கடை அமைத்து தொழில் செய்து வந்தோம். திருவிழா அல்லாத நாட்களில் ஊருக்குள் சென்றும் விற்பனை செய்து வந்தோம்.
ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. திருவிழா அல்லாத கோயில்களிலும் கடை போட காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால், திருவிழா, கோயில்களை நம்பி தொழில் செய்து வந்த எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது. ஒவ்வொருவரது வீட்டிலும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையில் பொருட்கள் முடங்கி உள்ளன. இவற்றை விற்றால்தான் வாரவட்டி கட்ட முடியும். அன்றாடம் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி குடும்பம் நடத்த முடியும். தனியார் நிறு நிறுவனங்களைத் தவிர, வேறு எவரும் எங்களை நம்பி கடன் தருவதில்லை.
எனவே, அரசு எங்களை தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றனர்.