Last Updated : 18 Apr, 2021 03:18 AM

 

Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

வளரும் கன்றுகளுக்கான தீவன மேலாண்மையை அறிவோம்

பொதுவாக இளங்கன்றுகளுக்கு (0 – 3 மாதங்கள்) வரை தாய்ப்பால் பொதுவாக கிடைக்கப் பெற்று விடும். தனியாக தீவனத்திற்கென்று செலவு ஏற்படுதில்லை. ஆனால் இதுவே வளரும் கன்றுகள் அதாவது மூன்று முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் நிறுத்தப்பட்ட உடன் கன்றுகளுக்கான தனியான அடர்தீவனம் வைக்கும் முறை கறவை மாடு வளர்ப்பவர்கள் வெகு சிலரிடமே காணப்படுகிறது.

இந்த தீவன மேலாண்மை குறித்து கூறுகின்றனர் கடலூரில் உள்ள கால்நடை மருத்துவப்பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்கள் பி.முரளி, ப.சிலம்பலரசன்.

“இளங்கன்றுகள் வளரும் பருவத்தில் முறையான தீவனம் அளிக்கப்படாததால் சரியான தருணத்தில் பருவம் எய்தாமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக மருத்துவ சிகிச்சை செய்ய நேரிடுகிறது.

முறையான தீவனம் அளிக்கப்படும் போது கன்றுகள் 12 முதல் 18 மாதத்தில் பருவமடைந்து 30 மாதங்களில் முதல் கன்று ஈன்று விடும். கன்றுகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேல் பசுந்தீவனத்தை நாள் ஒன்றுக்கு 2 கிலோ என ஆரம்பித்து படிப்படியாக உயர்த்தி 6 மாதத்தில் சராசரியாக 5 முதல் 10 கிலோ அளிக்கப்பட வேண்டும்.

வேலி மசால், குதிரை மசால் போன்ற பயறு வகை தீவனங்கள் அளிக்கும்போது நிழலில் 3 – 4 மணி நேரம் காயவைத்தப் பின்னர் கன்றுகளுக்கு அளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் வயிறு உப்பசம் ஏற்படுவதை தடுக்கலாம்.

கன்றுகளுக்கு அடர் தீவனம் சராசரியாக 1.2 கிலோ 1.5 கிலோ மற்றும் 1.7 கிலோ அளவுக்கு 4. 5மற்றும் 6ம் மாதங்களில் வழங்க வேண்டும். கன்றுகளுக்கு வழங்கப்படும் பசுத்தீவனங்களின் அளவை வைத்து அடர் தீவனத்தின் அளவை முடிவு செய்து கொள்ளலாம்.

மூன்று மாதங்கள் மேல் ஆரம்ப கால பசுத் தீவனத்திற்கு பதிலாக வளரும் கன்றுகளுக்காண அடர்த் தீவனம் அளிக்கப்பட வேண்டும்.

மக்காசோளம் 22 கிலோ,கோதுமை தவிடு 25 கிலோ கடலைப் புண்ணாக்கு 30 கிலோ,குதிரை மசால் 20 கிலோ, தாது உப்பு 2 கிலோ,சமையல் உப்பு 1 கிலோ இந்த அடர் தீவனத்தை கலவையாக தர வேண்டும்.

வளரும் கன்றுகளுக்கு நாட்டு மாடுக்கு அடர் தீவனம்1-2 (கிலோ), பசுந்தீவனம் (கிலோ) புல் வகை தீவனம்-7-9,பயறு வகை-2-3,மர வகை தீவனம்- 1-2,மொத்த பசுந்தீவனத்தின் அளவு-11-13, உலர் தீவனம் 2 (கிலோ),கலப்பின மாடு மற்றும் எருமை அடர் தீவனம்2-3 (கிலோ), பசுந்தீவனம்(கிலோ)- புல்வகை தீவனம்- 7-9,பயறு வகை-2-3, மர வகை தீவனம்- 1-2,மொத்த பசுந்தீவனத்தின் அளவு-12-14, உலர் தீவனம் (கிலோ) 2-3. வளரும் கன்றுகளுக்கு சரியான அளவு அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தை தரும்போது போது வளர்ச்சி இன்மையால் பருவம் எய்தாததால் ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைவதோடு மட்டுமல்லாமல் கறவை மாட்டுப் பண்ணையத்தின் பொருளாதாரம் மேம்பட உதவுகிறது” என்று கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x