ஓராண்டாகத் தொடரும் விடுமுறையால் கூலி வேலைக்குச் செல்லும் இளம் சிறார்கள்

ஓராண்டாகத் தொடரும் விடுமுறையால் கூலி வேலைக்குச் செல்லும் இளம் சிறார்கள்
Updated on
1 min read

நோய் தீர்வு காணும் மருந்து இல்லை, வருமுன் பாதுகாக் கும் வழிமுறைகளும் இல்லை, காற்றில் பரவும் எனக் கருதப்படும் கரோனா எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

கரோனா 2-வது அலை அச்சத்தின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடக்க நிலை, நடுநிலை பள்ளிகள் கடந்த ஓராண்டாக மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் ஒரு வருடமாக பள்ளிகள் இயங்காத நிலையில் சிறுசிறு வேலைகளில் ஈடுபடத் தொடங்கி யிருக்கின்றன. ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோரால் அவர்கள் சிறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பண்ருட்டியை அடுத்த திருவாமூர் கிராமத்தில் விளை நிலங்களில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த சில சிறார்களிடம் பேசினோம்,

அவர்கள் வயல்வெளியில் வேலை பார்ப்பதை சலிப்புடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற ஆதங்கம் அவர்களிடையே இருப்பதை அவர்கள் பேச்சில் உணர முடிந்தது.

அவர்களின் பெற்றோரிடம் பேசினால், இந்த பசங்களை கூட்டி வரும் போது, அவர்களுக்கும் கூலி கிடைக்கும்; வீடுகளில் பொழுது போகாமல் இருப்பவர்கள் இங்கு வந்தால் ஏதேனும் பயனுள்ள வேலைகளைச் செய்வார்கள் என்கின்றனர்.

இது தொடர்பாக சிறார்களுக்கான சிறுகதை எழுத்தாளர் ஆயிஷா நடராஜனிடம் பேசினோம். அவர் கூறியது:

“குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கும் என்ற மன நிலையால் ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கற்றல் இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதால், இடைநிற்றலை தடுக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. இதில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

சிறார் வேலை அமர்த்தும் பணிகள் அதிகரிக்கும் சூழலில், அதற்கான தொழிலாளர் நலத்துறை இதை கவனிக்கத் தவறுவதேன்? தமிழக அரசின் கொள்கை படி ஒரு மாணவன் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் கவனம் செலுத்துவதில்லை.

இமாச்சல பிரேதசத்தில் வாரத்தில் இரு நாட்கள் மாணவர்களை வரவழைத்துதிறந்த வெளியில் நுண் வகுப்புகள்(Micro Class) சமூக இடைவெளியில் நடத்தப்படுகின்றன. இந்த நெருக்கடியான தருணத்தில் அதுபோன்று தமிழக அரசும் முயற்சிக்கலாம். மேலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பிரிட்ஜ் கோர்ஸ் போன்று பாடம் சார்ந்த சிறு குறு புத்தகங்களை வழங்கி படிக்கச் செய்யலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in