

பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட் டங்களின் விளைவாக, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்காக, திருநின்றவூர் ஏரியில் இருந்து நேற்று மதியம் முதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திரு நின்றவூரில் உள்ளது ஈசா ஏரி. சுமார் 835 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150 ஏக்கர் விளை நிலங்களுக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், ஈசா ஏரியின் ஒரு பகுதியில், 50 ஏக்கர் பரப் பளவில், கடந்த 18 ஆண்டுக ளுக்கு முன்பு, உலக வங்கி நிதியு தவியுடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் பெரியார் நகர் பகுதி-1 மற்றும் 2, முத்தமிழ் நகர், கன்னிகாபுரம், சுதேசி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகள் உரு வாக்கப்பட்டன. இந்த குடியிருப்பு பகுதிகளில் தற்போது 2,400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் ஈசா ஏரி நிரம்பி வழிந்தது. இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய நீர், பெரி யார் நகர், முத்தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக தேங்கி நிற்கிறது. சுமார் 5 அடி உயரத்துக்கு கழிவுநீர் கலந்த தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
‘கடந்த 35 ஆண்டுகளாக ஏரியை தூர்வாராததும், ஏரிக்கரையை பலப்படுத்தாததும், ஏரியை ஒட்டிய குடியிருப்பு பகுதியை ஒட்டி முழு மையான தடுப்புச் சுவர் அமைக் காததும்தான் இந்த பிரச்சினைக்கு காரணம்’ என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கி யுள்ள மழைநீரை அகற்ற வசதி யாக, ஈசா ஏரியின் நீரை திறந்து விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விவ சாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், அப்பகுதியில் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என தமிழக நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். இதையடுத்து, நேற்று மதியம் முதல் 2 மதகுகள் மூலம் பொதுப்பணித் துறை அதி காரிகள் ஈசா ஏரியில் இருந்து குறைந்த அளவில் நீரை வெளி யேற்றி வருகின்றனர். விவசாயிக ளின் எதிர்ப்புக்கிடையே காவல் துறையினரின் ஒத்துழைப்போடு மதகுகளை திறந்தனர்.