

அமெரிக்கன் கல்லூரி மாண வர்கள் கரோனா காலத்தில் வீட்டில் இருந்தவாறு மக்களுக்குத் தேவையான புதுமையான சாதனங் களை உருவாக்கி உள்ளனர்.
இளங்கலை ஐ.டி. மாணவர்கள் மக்களுக்குப் பயன்படும் பொருட் களை எளிதான வன்பொருள் (Arduino Board) மற்றும் மென் பொருளை பயன்படுத்தி பேராசி ரியர்கள் துணையோடு உருவாக்கி உள்ளனர். அவை வருமாறு:
ஸ்மார்ட் குப்பை தொட்டி
இதை வடிவமைத்தவர் இளங்கலை ஐ.டி. மாணவர் எஸ்.அகிலேஸ்வரன். இத்தொட்டியை தொடாமலே சென்சார் முன்பாக நமது கையைக் காண்பிப்பதன் மூலம் தொட்டியின் மூடியை திறக்க அல்லது மூட முடியும்.
சூரிய ஒளி டிராக்கர்
இதை இளங்கலை ஐ.டி. மாணவர் என்.சதீஷ்ராஜா வடிவமைத்தார். இந்த சாதனமானது சூரிய ஒளி இருக்கும் திசையை நோக்கி 180 டிகிரி நகரும். இது அர்டுயினோ போர்ட் மற்றும் எல்டிஆர் சென்சார் மூலம் இயங்கக் கூடியது. எல்டிஆர் சென்சார் ஒளியின் தீவிரத்தைக் கண்டுபிடிக்கும்.
வாயு கசிவு கண்டுபிடிப்பான்
இதை வடிவமைத்தவர் இளங்கலை ஐ.டி. மாணவர் எஸ்.ஹரிஹரன். வீட்டின் சமையலறை யில் நாம் பயன்படுத்தும் காஸ் சிலிண்டரில் வாயுக் கசிவைக் கண்டு டித்து பஸ்ஸர் மூலம் ஒலியெழுப்பி எக்சாஸ்ட் ஃபேன் ஓடவிட்டு தீ விபத்தைத் தவிர்க்க இந்த சாதனம் உதவும்.
இது எல்பிஜி வாயு மற்றும் கரியமில வாயுவை கண்டுபிடிக்கக் கூடியது. இது தொழிற்சாலைகள், ஹோட்டல், வீடுகளில் பயன்படுத்தி விபத்தைத் தவிர்க்கலாம்.
மடிக் கணினி கட்டுப்பாட்டு கருவி
இதை வடிவமைத்தவர் இளங் கலை ஐ.டி. மாணவர் வி.ஜி.கிஷோர் கார்த்திக். இதனால் மடிக்கணினியை சைகை மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதில் அர்டுயினோ போர்ட் மற்றும் அல்ட்ராசோனிக் சென்சார் பயன் படுத்தப்பட்டுள்ளது. கை சைகையை வைத்து பிடிஎப் ஆவணங்களை மேலும் கீழும் கொண்டு செல்ல முடியும். ஒலி அளவைக் கூட்டவோ, குறைக்கவோ முடியும். படங்களை முன்னோக்கியோ, பின்னோக்கியோ கொண்டு செல்ல முடியும்.
எல்.ஈ.டி. தூர காட்டி
இதை வடிவமைத்தவர் இளங் கலை ஐ.டி. மாணவர் எம்.மதன் குமார். காரில் செல்லும்போதும், பார்க்கிங் செய்யும் போதும் நமது கார் அடுத்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக எல்ஈடி தூர இண்டிகேட்டர் என்ற சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் எந்த ஒரு வண்டியும் மிக அருகே வந்தால் எல்ஈடி விளக்கு எரியும். இதனால் விபத்தைத் தடுக்க முடியும்.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறும்போது, நவீன கண்டுபிடிப்புகள் அனைத்தும் அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தினால், கல் லூரி வளாகத்தில் நடைமுறைப் படுத்தப்படும் என்றார். மேலும் தொழிற்சாலை, வணிக வளாகம், வீடுகளுக்குத் தேவைப்படுவோர் ஐ.டி. துறைத் தலைவர் முனைவர் ஷப்னத்தை அணுகலாம்.