Last Updated : 18 Apr, 2021 03:18 AM

 

Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

எஸ்.ஐ.க்கள் பதவி உயர்வில் பாரபட்சம்: தகுதியிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக புகார்

நேரடி தேர்வு மூலம் பணியில் சேர்ந்த 630 எஸ்.ஐ.க்களுக்கு தகுதியிருந்தும் பதவி உயர்வு தரப்படவில்லை என புகார் எழுந் துள்ளது.

தமிழ்நாடு சீருடை பணி யாளர் கள் தேர்வு வாரியம் சார்பில், காவல்துறையில் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் எஸ்.ஐ.க்களுக்கு, 10 ஆண்டுகள் எவ்வித குற்றச்சாட்டுமின்றி பணி யாற்றியிருந்தால் பதவி உயர்வு அளிக்கப்படும்.

தமிழகத்தில் கடந்த 2008-ல் 750 எஸ்.ஐ.க்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் 2019-ல் வெளியிடப்பட்டது. ஆனால், இவர்களில் 120 பேர் தவிர மீதமுள்ள 630 எஸ்.ஐ.க்களுக்கு இன்னும் பதவி உயர்வு கிடைக் கவில்லை.

அதேநேரம் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் சிலர் இடையில் புகுந்து பதவி உயர் வைப் பெற்றுள்ளனர். இதனால் எவ்வித குற்றச்சாட்டிலும் சிக் காமல் பணிபுரிந்த எஸ்.ஐ.க்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.க்கள் கூறியதாவது:

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.க்கள், காவல் ஆய்வா ளர்கள், டி.எஸ்.பி., எஸ்.பி. போன்ற பதவிகளில் உள்ளோருக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைத்து விடுகிறது. நேரடி எஸ்.ஐ.க்களாக தேர்வு செய்யப்படுவோர் பெரும் பாலும், பதவி உயர்வுக்காக சில ஆண்டுகள் காத்திருக்க வேண் டியுள்ளது. 2008-ல் பணியில் சேர்ந்த எங்களுக்கு 2019-ல் பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

அதேநேரம், காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் குறுக்கு வழி யில் பதவி உயர்வைப் பெற்று விடுகின்றனர்.

முறையான பட்டியலை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு அமை ச்சுப் பணியாளர்கள் கொண்டு செல் வதில்லை.

பட்டியலில் அதிகமானோர் இடம் பெற்றிருந்தாலும், ஒவ் வொரு முறையும் குறைந்த எண்ணிக்கையிலானோருக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக் கப்படுகிறது. தகுதியிருந்தும் பதவி உயர்வும், அதற்கான ஊதிய உயர்வும் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x