

சென்னையில் இன்னும் 2 மாதங் களுக்கு தேவையான அளவு ரூ.90 கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக அரை கிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி, 100 ஆட்டோக்களில் இப் பொருட்களை வழங்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுகாதாரத் துறையுடன் மாநக ராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து 100 ஆட்டோக்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட வீடுகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆட்டோவிலும் ஒரு சுகாதார ஆய்வாளர் சென்று, பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வார். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் ஒரு கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும்.
அவசர உதவிக்கு 104
சென்னையில் டிசம்பர் 9-ம் தேதி மட்டும் ஆயிரத்து 817 மருத்துவ முகாம்கள் நடத் தப்பட்டு, 3 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் ஈடுபட் டுள்ள 26 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி கள் போடும் பணியும் தொடங் கப்பட்டுள்ளது. மேலும், 2 மாதங் களுக்கு தேவையான ரூ.90 கோடி மதிப்பு மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப் படுவோர், 24 மணி நேரம் செயல்படும் 104 தொலைபேசி சேவையை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது, சுகா தாரத்துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே.குழந்தை சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.