Published : 17 Apr 2021 03:14 AM
Last Updated : 17 Apr 2021 03:14 AM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள் கண்காட்சி: கோவை லீ மெரிடியன் ஓட்டலில் தொடங்கியது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கோவையில் பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று தொடங்கியது.

கோவை அவிநாசி சாலை லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் நடைபெறும் இக்கண்காட்சியில் சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட அழகிய பல வடிவங்களில் பல்வகை மூலப்பொருட்களை கலந்து உருவாக்கப்பட்ட நீரூற்றுகள், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புல்வெளியில் பயன்படுத்தும் முற்றிலும் மரங்களால் தயாரிக்கப்பட்ட ஊஞ்சல்கள், ஒரே பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட வெள்ளை குதிரை சிலை, சுவரில் பொருத்தும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய வரைகலை ஓவியங்கள், வேலைப்பாடுகள் மிக்க முற்றிலும் உலோகத்தால் உருவாக்கப்பட்ட புத்தர், சிவன், கிருஷ்ணன், ஆளுயர விநாயகர், சாயிபாபா உள்ளிட்ட கடவுள்களின் சிலைகள், விலங்குகள், விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதோடு, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மரக்கட்டில்கள், சோபாக்கள், காபி டேபிள்கள், மர இருக்கைகள், மெத்தை விரிப்புகள், தரை விரிப்புகள், டைனிங் டேபிள் ரகங்கள், பிளாஸ்டிக் சேர்கள், அலுவலக இருக்கைகள், பெங்களூரு ரக பூஜை பொருட்கள், தொழில்நுட்பங்களுடன் கூடிய பூஜை பொருட்கள், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு உள்ளன.

மேலும், டெமியூர் இன்டீரியர்ஸ் நிறுவனம் சார்பில் வீட்டுக்கான நவீன சமையலறை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட ஒரு வீட்டில், வாடிக்கையாளரின் எண்ணம், விருப்பம் மற்றும் பொருளாதாரம் அனைத்துக்கும் ஏற்ற வகையில் சமையல் அறை, ஹால் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் உள்கட்டமைப்பு செய்து தருவதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

நேற்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 19-ம் தேதி நிறைவு பெறுகிறது.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x