

சிறையில் கண்மூடித்தனமாக நடந்து வந்த முறைகேடுகளின் பின்னணியில் கோவை சரக சிறைத்துறை டிஜஜி கோவிந்தராஜ், பணி ஓய்வு பெற 2 நாட்களே உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு வழங்கப்பட்ட உணவுப் பொருள்களின் தரத்தைக் குறைத்து ரூ. 2 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கைதிகளுக்கு சட்ட விரோத மாக செல்போன், பீடி, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பொருள்களை விநியோ கிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் எதிரொலியே இவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
கோவை மத்திய சிறையில் தண்டனை விசாரணை கைதிகள் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு தினமும் வழங்கப் படும் உணவு பொருள்கள் தரம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. விசாரணையின் முடிவில் மாநில உள்துறை அமைச் சகத்துக்கு அறிக்கையை சிபிசி ஐடி போலீஸார் சமர்ப்பித் துள்ளனர். அதில், கோவை மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதி களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தரமற்ற உணவுப் பொருள்கள் வழங்கியதாகவும், தனியாக உணவுக்கூடம் நடத்தி சில கைதிகளுடன் கைகோர்த்து சிறைத்துறை அதிகாரிகள் பணம் ஈட்டி வருவதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை சிறையை கண்காணிக்கும் சி.ஐ.டி போலீஸார் தெரிவித்ததாவது: “சிறையில் செல்போன் பேச ரூ.50, பிரியாணி பொட்டலத்துக்கு ரூ.500, மது பாட்டிலுக்கு ரூ.500, கஞ்சா, பீடி, சிகரெட்டுக்கு ரூ.150, ரூ.50, ரூ.100 என வசூலிக்கப்பட்ட தாகத் தெரிகிறது. ஐந்தடுக்கு பாது காப்பு கொண்ட இந்த சிறைக் குள் சிம்கார்டுகள், செல்போன் கள், அதில் கண்டு ரசிக்க திரைப்படக் காட்சிகள் எல்லாம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள் ளன. கைதிகளுக்கு வாங்கப் பட்ட அத்தியாவசியப் பண்டங்களி லேயே மிகப் பெரிய கையாடல் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
சிறைக்கு வரும் ஈமு கோழி மோசடியாளர்கள் முதல் நிதி நிறுவன மோசடி கைதிகள் வரை வெளி வட்டார ஆட்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து பல்வேறு விதங்களில் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் கோடிக்கணக்கில் பேரம் நடத்தி, சிறைத்துறையினர் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர். டிஜஜி மீது மட்டுமல்ல; இன்னும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தொடரவும் வாய்ப்பு உண்டு’’ என்று தெரிவித்தனர்.