

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னை சென்ட் ரல் மற்றும் எழும்பூரில் இருந்து இயக்க வேண்டிய விரைவு மற்றும் புறநகர் மின்சார ரயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையில் 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப் பட்டன.
இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறு கையில், ‘‘சமீபத்தில் பெய்த கன மழையால் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டன. மேலும், மின்சார ரயில்களின் சேவையும் சில நாட்களுக்கு முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கான தொகை திருப்பி அளிக்கப்பட்டது. பயணிகள் வேறு தேதிகளில் மீண்டும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், இதை வருவாய் இழப்பு என கூறமுடியாது. ஆனால், கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையில் முன்பதிவு செய்யாத பெட்டிகள் மற்றும் மின்சார ரயில்கள், பார்சல் சர்வீஸ் மூலம் கிடைக்க வேண்டிய ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.