

கனமழையினால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி யை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன் பார்வை யிட்டார். அம்பத்தூர் சிட்கோ தொழிற் பேட்டையில் 2 லட்சத்துக் கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். கனமழையால் அம்பத்தூர் தொழிற் பேட்டையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பெரும்பாலான தொழிற் சாலைகள் செயல்படாமல் முடங் கின. இயந்திரங்கள் நாசமடைந் தன. இதனால், அம்பத்தூர் தொழிற் பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொழிற்சாலைகள் தற்போது உற்பத்தி தொடங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இப்பகுதிகளை நேற்று ஜி.ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பிறகு, உற்பத்தியா ளர்கள் சங்க தலைவர் வி.ராஜு, செயலாளர் வேணு கோபால் ஆகி யோரை சந்தித்து தொழிற்பேட்டை யில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து குறித்து கேட்டறிந்தார். அப்போது, அவர்கள் ‘காப்பீட்டு நிறுவனங்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி காப்பீட்டுத் தொகையை தர மறுப்பதாகவும் சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகிக்க மறுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் அவர்களிடம் பேசிய ராமகிருஷ் ணன், பாதிப்புகள் குறித்து, மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு கிடைக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.