இணையவழி தேர்வு முடிவில் குளறுபடி; அண்ணா பல்கலைக்கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் அதிருப்தி: சரியான விளக்கம் தரவில்லை என புகார்

இணையவழி தேர்வு முடிவில் குளறுபடி; அண்ணா பல்கலைக்கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் அதிருப்தி: சரியான விளக்கம் தரவில்லை என புகார்
Updated on
2 min read

இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி களால் பொறியியல் மாணவர்கள் தவித்து வரும் நிலையில், முறை யான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி அண்ணா பல்கலைக் கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

பொறியியல் கல்லூரி மாணவர் களுக்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை, கரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ர வரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்பு களில் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக் கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 11-ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இதில், ஒரு லட்சத்துக்கும் அதிக மான மாணவர்களுக்கு தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடாமல், ‘நிறுத்திவைப்பு’ என்பதை குறிக்கும் விதமாக WH (With held) என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால், மாணவர் கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறை கேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

தேர்வில் முறைகேட்டில் ஈடு பட்டதாக அறியப்பட்ட 30 ஆயிரம் மாணவர்கள் மற்றும் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு லட்சம் மாணவர்கள் தவிர, மீதமுள்ள மாணவர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவானோர்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்தகைய மோசமான தேர்வு முடிவுகள் இதுவரை வந்ததில்லை. நன்றாக படிக்கும் மாணவர் களும்கூட தேர்ச்சி பெறவில்லை. காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டில் நன்றாக பயின்று வந்த மாணவி ஒருவருக்கு, நான்கு பாடங்களில் தோல்வி என முடிவு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார்.

இவ்வாறு தேர்வு முடிவில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர் பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறையிடம் கேட்டபோது அங்கு முறை யான விளக்கம் கிடைக்க வில்லை. இதனால், கல்லூரி களே குழப்பத்தில் இருந்து மீளாமல் உள்ளன. தேர்வு முடிவு மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தேர்வு முடிவுகள் குறித்த குளறுபடிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகை யில் அதிகாரப்பூர்வமான அறி விப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எச்சரித்து இருக்கலாம்

இந்த பிரச்சினை தொடர் பாக கல்வியாளர் ஜெய பிர காஷ் காந்தி கூறும்போது, ‘‘தேர் வில் ஒரு மாணவர் முறை கேட்டில் ஈடுபடுவதாக சந்தேகம் எழும்போதோ அல்லது வழிமுறை களை பின்பற்றாத போதோ சம்பந்தப்பட்ட மாணவரிடம் அண்ணா பல்கலைக்கழகம் எச் சரிக்கை விடுத்து இருக்கலாம். இதன்மூலம், மற்ற பாடத் தேர்வை யாவது அந்த மாணவர் முறையாக எழுதி இருப்பார். ஆனால், 2 மாதம் கழித்து முறைகேடு சந்தேகம் எழுப்புவது நியாயமில்லை. கல் லூரிகள் தேர்வு கட்டணம் செலுத் தாமல் இருப்பதால், மாணவர் களின் முடிவுகளை வெளியிடாமல் இருப்பது தவறான முன்னுதாரண மாகும். மாணவர்களின் குழப் பத்தை தீர்க்க உதவி மையத்தை அண்ணா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அதேபோல கல்லூரிகளுக்கு சரியான விளக் கம் அளிக்கவும் அண்ணா பல் கலைக்கழகம் முன்வர வேண்டும்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் உள்ள குழப்பத்தை கருத்தில் கொண்டு மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்ட மிட்டுள்ளது. அதேபோல, முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்களின் செயல்பாடுகளை கல்லூரி அளவில் விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரி தரப்பில் தரப்படும் விளக்கங்களின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்குத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும். எனவே, முறைகேட்டில் ஈடுபடாத மாணவர் கள் அச்சப்படத் தேவையில்லை’’ என்று பதில் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in