Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது; தமிழகத்தில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகுமா?- தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

சென்னை

கரோனா தொற்று தொடர்ந்து அதி கரித்து வருவதால் தமிழகத்தில் கட்டுப் பாடுகளை கடுமையாக்குவது தொடர் பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்து கிறார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, தமிழ கத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நட வடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந் தார். இதனால், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விளக்கம் அளித்ததுடன், உயர் நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித் தும் தெரிவித்தார்.

தமிழகத்திலும் தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலைமைச் செய லர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக் கிறது. இதில், சுகாதாரத் துறை செய லர் மற்றும் இதர துறைகளின் செயலர்கள், மருத்துவ நிபுணர் குழுவினர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் புதிய உச்சமாக கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று புதியதாக 4,797 ஆண்கள், 3,190 பெண்கள் என மொத்தம் 7,987 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிக பட்சமாக சென்னையில் 2,558 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 62,935 ஆக அதிகரித்துள் ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 91 ஆயிரத்து 839 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4,176 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 58,097 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமி ழகத்தில் கரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு கரோனா

தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் ஊரடங்கு?

தலைமைச் செயலர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, கடைகள் திறக்கப்படும் நேரம் குறைப்பு, சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. கரோனா பாதிப்பு நிலை மேலும் மோசமானால், அடுத்த வாரத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x