Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை ஐஐடி வடிவமைப்பு: ஜூலையில் சோதனை ஓட்டம்

பேட்டரியில் இயங்கக்கூடிய பறக்கும் இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் டாக்ஸியை வடிவமைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டது. அதற்காக ‘தி இ-பிளேன் கம்பெனி’ (The ePlane Company) என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு நிறுவியது. இந்நிலையில், மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் பறக்கும் இ-டாக்ஸியை ஐஐடி வடிவமைத்துள்ளது.

இதுகுறித்து பேராசிரியரும், இ-பிளேன் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான சத்ய சக்கரவர்த்தி கூறியதாவது:

சிறிய விமான வடிவிலான இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் இதில் 2 பேர் பயணிக்க முடியும். இந்த இ-டாக்ஸி சுமார் 200 கிலோ அளவிலான எடையை சுமந்தபடி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

இ-டாக்ஸி சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் முழு வடிவம் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லதயாராகிவிடும். இது நடைமுறைக்கு வரும்போது, வழக்கமான கால்டாக்ஸியைவிட 2 மடங்குமட்டுமே வாடகை அதிகம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x