

கோவையில் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியதால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாவட்டத்தின் 10 சட் டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் இந்த மையத்தில் உள்ள காப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. காப்பு அறைகள் முன்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காப்பு அறை களில் முன்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை, அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப் பாட்டு அறையில் இருந்தவாறு மெகா திரை மூலம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அதேபோல், அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள், காப்பு அறைகளை கண்காணிக்க வாக்கு எண்ணிக்கை மையத் தில் பிரத்யேக இடவசதி செய்யப்பட்டுள் ளது. அங்கு மெகா திரையில் சிசிடிவி காட்சிப் பதிவு மூலம் காப்புஅறைகளை முகவர்கள் கண்கா ணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம்மாலை, நள்ளிரவு நேரங்களில் மழைபெய்த போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் உள்ள மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியுள்ளது. இதனால் முகவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இதுதொடர்பாக, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான நா.கார்த்திக், கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பிய கோரிக்கை மனுவில், ‘‘வாக்கு எண்ணிக்கை மையத்தில், அரசியல் கட்சிகளின் முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் முகவர்கள்அமர்ந்திருக்கும் அறைகளில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை களில் இருந்து மழைநீர் ஒழுகி, அறை முழுவதும் தண்ணீர் புகுந்து, முகவர்கள் அமரக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே, முகவர்கள் இருக்கும் அறையில்ஏற்படும் மழைநீர் கசிவை தடுக்கஉடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப் பட்டுள்ளது.