தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்ப் பல்கலை.யில் 50% தள்ளுபடியில் புத்தக விற்பனை கண்காட்சி தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புத்தக சிறப்பு விற்பனையை நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்ட துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன். உடன், பதிப்பக துறை முன்னாள் இயக்குநர் ராமநாதன் உள்ளிட்டோர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புத்தக சிறப்பு விற்பனையை நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்ட துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன். உடன், பதிப்பக துறை முன்னாள் இயக்குநர் ராமநாதன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

தமிழ்ப் புத்தாண்டை முன் னிட்டு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத தள்ளுபடியில் புத்தக சிறப்பு விற்பனை கண்காட்சி நேற்று தொடங்கியது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பல்கலைக்கழக தொடக்க நாளில்(செப்.15) புத்தக சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டுசெப்.15-ம் தேதி தொடங்கி நடைபெற்ற சிறப்பு புத்தக விற்பனையில் ரூ.19.20 லட்சத்துக்கு புத்த கங்கள் விற்பனையாகின.

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பல்கலைக் கழக வளாகத்தில் 50 சதவீத தள்ளுபடியில் சிறப்பு விற்பனை கண்காட்சியை துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக பதிப்புத் துறை யின் முன்னாள் இயக்குநர் ராமநாதன் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர். பதிவாளர் கு.சின்னப்பன், பதிப்பக துணை இயக்குநர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கோ.பாலசுப் பிரமணியன் கூறியது:

தமிழின் பன்முகக் கூறுகளை ஆழமாக ஆராய்வதும், ஆவணப்படுத்துவதும், பதிவு செய்வதும் என பல நிலைகளில் தமிழ் மொழி, கலை, பண்பாடு, அறிவியல் தளங்களை தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்வதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைப்புடன் செயல்படுகிறது. இப்பல் கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமின்றி தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்களின் படைப்பு கள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாகப் பதிவு செய்து, அவற்றை நூல்களாக வெளியிடுகிறது.

இந்த அரிய நூல்களை பொதுமக்கள் மலிவு விலையில் வாங்கி பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு 2 முறை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. தமிழக அரசின் ரூ.2 கோடி நிதி உதவியுடன், மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் மறு அச்சாக அச்சிடப்பட்டு, தற்போது சிறப்பு விற்பனையில் உள்ளன. மேலும், 16 புதிய நூல்கள் அச்சிடும் பணி நிறைவுறும் தருவாயில் உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு விற்பனை வரும் மே 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது என்றார்.

மலிவு விலையில் வாங்கி பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு 2 முறை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in