பண்ருட்டி நகராட்சி பகுதியில் 6 ஆண்டுகளாக மூடப்படாத வடிகால் வாய்க்கால்

பண்ருட்டி தீர்த்தா சீனுவாசன் சாலை மற்றும் பிள்ளையார்கோயில் சாலை சந்திப்பில் மூடப்படாமல் உள்ள வடிகால்.
பண்ருட்டி தீர்த்தா சீனுவாசன் சாலை மற்றும் பிள்ளையார்கோயில் சாலை சந்திப்பில் மூடப்படாமல் உள்ள வடிகால்.
Updated on
1 min read

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 ஆண்டுகளாக மூடப் படாத வடிகால் வாய்க்காலால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டில் தீர்த்தா சீனுவாசன் சாலையும், பிள்ளையார் கோயில் சாலையும் சந்திக்கும் இடத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் நடுவில்4 அடி அகலத்திற்கு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை வழியாக இருசக் கர வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது. கார் உள் ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்லமுடியாத நிலை இருப்பதாகவும், இரவு நேரங்களில் பைக்கில் செல்வோர் வடிகால் இருப்பதைஅறியாமல் விழுந்து விபத்துக் குள்ளாவதும் தொடர்கதையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நகராட்சி நிர் வாகத்திடம் புகார் அளித்தபோது, நகர் நல அலுவலர், அந்த பள்ளத்தை படம் எடுத்து வந்துகாண்பிக்குமாறு அறிவுறுத்தி யுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் படம் எடுத்து அனுப்பி வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடர்ந்து 6 ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதாகவும், இதற்குஎப்போது விடிவு காலம் பிறக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுதொடர்பாக பண்ருட்டி நகராட்சி ஆணையர் பொறுப்பு வகிக்கும் ரவியிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் அதுகுறித்து பேச முன்வரவில்லை.

வாய்க்கால் நடுவில்4 அடி அகலத்திற்கு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in