பணி முடித்துவிட்டு செல்வோரின் வசதிக்காக மாநகர இரவு நேர பேருந்து எண்ணிக்கை அதிகரிக்க பயணிகள் வலியுறுத்தல்

பணி முடித்துவிட்டு செல்வோரின் வசதிக்காக மாநகர இரவு நேர பேருந்து எண்ணிக்கை அதிகரிக்க பயணிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னையில் இரவு நேர பேருந்து களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் 765 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 652 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் சுமார் 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரி வடைந்து வரும் நிலையில், மாநகர பேருந்துகளின் தேவை அதிகரித்து வருகிறது. வெளி யூர்களில் இருந்து வந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையிலும் மாநகர பேருந்துகளில் மட்டுமே பய ணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக இரவு 8.30 மணிக்கே பெரும்பாலான மாநகர பேருந்துகளின் சேவை திடீரென நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘தற்போது பெய்து வரும் கனமழையில் மாநகர பேருந்துகளின் சேவை முற்றிலும் நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டது பாராட்டுக்குரியது. பொதுபோக்குவரத்தின் அவசி யத்தை மக்கள் உணரும் வகையில் மாநகர பேருந்துகளின் சேவை இருந்தது. முன்பெல்லாம் இரவு 9.30 மணிக்கு பிறகுதான் மாநகர பேருந்துகளின் சேவை படிப்படியாக குறையும்.

ஆனால், கடந்த சில மாதங் களாக இரவு 8.30 மணிக்கு பிறகு மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை திடீரென பெரிய அளவில் குறைத்து இயக்கப்படு கிறது.

இதனால், பணி முடித்து விட்டு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள், முதியோர்கள் பேருந்துகளுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்ற னர். எனவே, பகலில் இயக்கப் படும் பேருந்துகளில் 50 சதவீத பேருந்துகளாகவது இரவு 10 மணி வரையில் இயக்க வேண்டும்’’ என்றனர்

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து மாநகர போக்கு வரத்து கழகத்தின் அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘சென்னை மாநகரத்துக்கு வெளியூரில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல், இரவு பணி முடித்து செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆதலால், இரவு பஸ்களை அதிகரித்து இயக்கி வருகிறோம்.

அதிகரிக்க நடவடிக்கை

தற்போது, பெய்த கனமழையினால் சில இடங்களில் பேருந்துகளே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றன. இதனால், சில வழித்தடங்களில் கட் சர்வீஸ் இயக்கி வருகிறோம். இருப்பினும் இரவு பேருந்துகள் அதிகம் தேவைப்பட்டால், வழித்தடங்களை தேர்வு செய்து, பேருந்துகளை அதிகரித்து ஓட்டுவோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in