Published : 17 Dec 2015 09:50 AM
Last Updated : 17 Dec 2015 09:50 AM

நிவாரண பணியில் ஒருங்கிணைந்தே செயல்பட்டோம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் தகவல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் டோரை மீட்பது மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்துதான் செய்தோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு முன்பு மாநில அரசின் வருவாய்த் துறை செயலாளர் வெங்கடேசன் தாக்கல் செய்த மனு விவரம்:

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்டங்களில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

பின்னர் மழை வெள்ளத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவார ணப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு ஆணையம், கடலோர காவல் படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுடன் தமிழக அரசு ஒருங்கிணைந்தே செயல் பட்டது. 19,37,593 பேர் பத்திர மாக மீட்கப்பட்டனர். 7,069 நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர் களுக்கு 1,34,32,953 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

490 மோட்டார் பம்புகளைக் கொண்டு தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. இப்போது 95 சதவீதம் பகுதிகளில் மின் விநியோகம் சீரடைந்துவிட்டது. டிசம்பர் 12-ம் தேதி நிலவரப்படி 14,268 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “பேரி டரின்போது மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு ஆகிய பணிகளை மாநில அரசுதான் செய்ய வேண் டும்.

மத்திய அரசு நிதியுதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்யும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கியப் பங்காற்றியுள்ளது.

மீட்புப் பணிக்கு 24 ஹெலி காப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்தே செயல்பட்டது. மழை நிவாரணத் தொகையாக ரூ.1,940 கோடி வழங்கப்பட்டுள்ளது” என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x