Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை விவரம்

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் கலந்துகொண்டு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விவரம் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில், வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் குடியாத்தம் ராஜகோபால் பாலி டெக்னிக் கல்லூரியிலும், காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் காட்பாடியில் உள்ள சட்டக் கல்லூரியிலும் அமைக்கப்பட் டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி விஐடி பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதன்படி, தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்றுகள் நடைபெறும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளது.

காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 349 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இங்கு 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப் படவுள்ளன. வேலூர் தொகுதியில் 364 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 26 சுற்று களாக எண்ணப்படவுள்ளன.

அணைக்கட்டு தொகுதியில் 351 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றதில் 26 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. கே.வி.குப்பம் தொகுதியில் 311 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றதால் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. குடியாத்தம் தொகுதியில் 408 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x