

மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் இருந்தவரைக்கும் திமுகவினருக்கும் அவருக்கும் ஒருபெரிய இடைவெளி இருந்தது. அவரது பாணியில் அவரது மகன் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் மேல்தட்டு அரசியல்வாதியாகவே இருக்கிறார். இந்த நிலையில், மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் தியாகராஜனுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம் என்கிறார்கள். ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு தோஸ்த் என்பதால், திமுக ஆட்சி யமைத்தால் தியாகுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். இதனால், இதற்கு முன்பு தியாகராஜனை கண்டும் காணாமல் இருந்த மதுரை திமுக பெருந்தலைகள் பழையபடி (பிடிஆரின்) பாளையம் இல்லத்தை சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்