Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

கரோனா தொற்றால் பயணிகள் குறைவு: சென்னையில் 18 விமானங்கள் ரத்து

சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலைத் தடுக்ககட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம்வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் நிலவி வருகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து நேற்று மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூரு,மதுரை, பாட்னா செல்ல வேண்டிய தலா 1 விமானங்கள் என9 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவேண்டிய 9 விமானங்கள் போதிய பயணிகள்இல்லாததால் ரத்து செய்யப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x