Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

புதுச்சேரி சுகாதாரத் துறையில் கரோனா மருந்து வாங்க செலவிட்ட தொகை எவ்வளவு? - 20 நாட்களுக்குள் தகவல் தர மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனாவுக்கு தேவையான மருந்து, சாதனங்கள் வாங்க செலவிட்டத் தொகை எவ்வளவுஎன தகவல்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல முறை விண்ணப்பித்தும் தராததால் டெல்லியில் இருமுறை மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 20 நாட்களுக் குள் முழு விவரங்களையும் தருமாறு புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் உத் தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா தொற்று நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் மாதம்ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுகா தாரத்துறையினர் புதுச்சேரியில் வெண்டிலேட்டர்கள், சோதனை கருவிகள், அத்தியாவசிய சாத னங்கள் மற்றும் மருந்துகள் ஆகி யவற்றை வாங்கினர்.

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சவுரவ்தாஸ் என்பவர் புதுச்சேரி சுகாதாரத் துறையிடம், "கரோனாவுக்கு செல விடப்பட்ட தொகை, வாங்கிய சாதனங்கள் மருந்து தொடர்பான விவரங்கள், வாங்கிய நிறுவனங்கள் தொடர்பான விவரங்கள் தேவை" என்று கோரியிருந்தார்.

அதற்கு தகவல் அளிக்கும் அதி காரி ரமேஷ் கடந்தாண்டு ஜூலையில் அளித்த பதிலில், "மனுதாரருக்கான பதில் சுகாதாரத்துறை இணையத்திலேயே உள்ளது" என்று கூறி, உரிய விவரங்களை தரவில்லை. இதையடுத்து அந்த நபர், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்தார். ஆனால், 3 மாதங்களுக்கு பின், அதாவது, கடந்தாண்டு அக்டோபர் 27-ம் தேதி வந்த பதிலில், "இணையத்தில் தகவல் உள்ளன. இன்னும் சாதனங்கள், மருந்துகள் வாங்கிக்கொண்டிருப்பதால் முழுவிவரங் களையோ, கூடுதல் தகவல்கள் தற்போது வெளியிட இயலாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட மத்திய தகவல் ஆணையத்தில் சவுரவ் தாஸ் மேல்முறையீடு செய்தார். அதையடுத்து மேல்முறையீடு ஆணையமானது, மனுதாரர் கோரிய விவரங்களை தர புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் 3 மாதங்களாகியும் மனுதாரர் கேட்ட விவரங்கள் தரப்படவில்லை.

மீண்டும் மத்திய தகவல் ஆணையத்தில் சவுரவ் தாஸ் இதுபற்றி புகார் அளித்தார். அதில், "கரோனா செலவு தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை தர தவறியுள்ளது. தகவல் ஆணைய உத்தரவையும் மதிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியன்று மத்திய தகவல் ஆணைய துணை பதிவாளர் ராவ் சுகாதாரத்துறைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், "மத்திய தகவல் ஆணையஉத்தரவை சுகாதாரத்துறை மதிக்கவில்லை. விண்ணப்பத்தாரர் கேட்டுள்ள அனைத்து விவரங்களை யும் மனுதாரருக்கும், மத்திய தகவல் ஆணையத்துக்கும் இக்கடி தம் கிடைத்த 20 நாட்களுக்குள் தர வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனாலும், இதுவரையில் விவ ரங்கள் வரவில்லை என்று மனுதாரர் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x