ஹாட் லீக்ஸ்: பாலாஜியை பதறவிட்ட திமுக!

ஹாட் லீக்ஸ்: பாலாஜியை பதறவிட்ட திமுக!
Updated on
1 min read

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நிலவரம் கலவரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஓட்டுக்குப் பணம், மளிகைக் கடை டோக்கன், உறவின்முறைகளுக்கு உபகாரம் என பல வழிகளில் வாக்குச் சேகரித்த கே.டி.ஆர், கடைசி கட்டத்தில் பட்டுச் சேலை - பட்டு வேட்டி வாங்கிக் கொள்வதற்கான ஜவுளிக்கடை டோக்கன்களையும் சில இடங்களில் ரகசியமாக விநியோகித்தாராம். இதை எப்படியோ ஸ்மெல் பண்ணிய திமுகவினர், அதே அச்சு அசலில் ஆயிரக் கணக்கில் போலி டோக்கன்களை அச்சடித்து ஆங்காங்கே தெருக்களில் சிதறவிட்டுவிட்டார்களாம். இதனால் ஏகத்துக்கும் குழம்பிப் போன கே.டி.ஆர். தரப்பு, எந்த டோக்கனுக்கு வேட்டி - சேலை கொடுக்கச் சொல்வது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறதாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in