

புதுச்சேரியில் முதன்மை நீதிபதியாக பதவி வகித்த பி.தனபால், சென்னை உயர் நீதிமன்ற தலைமைபதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக பதவி வகித்தசி.குமரப்பன், சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு பதிவாளராக இருந்த ஆர்.பூர்ணிமா, மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராகவும், உயர் நீதிமன்றஊழல் கண்காணிப்பு கூடுதல் பதிவாளர் எம்.சாய் சரவணன், ஊழல் கண்காணிப்பு பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.ஜோதிராமன், சென்னைநிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை நீதிபதிஎம்.என்.செந்தில்குமார், சென்னைஉயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற பதிவாளராக (மாவட்ட நீதித்துறை) இருந்த வி.தங்கமாரியப்பன், சென்னை குடும்பநல நீதிமன்ற 1-வது கூடுதல்முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி, உயர் நீதிமன்ற பதிவாளராகவும் (மாவட்ட நீதித்துறை), தருமபுரி மாவட்ட மோட்டார் விபத்துவழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகே.சீதாராமன், உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளராகவும் (ஆய்வு),அந்த இடத்தில் பணிபுரிந்த எஸ்.அப்துல் மாலிக், தமிழ்நாடு வக்ஃபுவாரிய தீர்ப்பாயத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் (தகவல் தொழில்நுட்பம்) பி.சுவாமிநாதன், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிற்சி மைய கூடுதல் இயக்குநராக பதவி வகித்த ஏ.கே.மெஹ்பூப் அலிகான், சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்ப்பாயஇயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த கே.அய்யப்பன் செங்கல்பட்டு கூடுதல் மாவட்டநீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற 16-வது கூடுதல் நீதிபதி ஏ.சரவணகுமார், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராகவும் (தகவல் தொழில்நுட்பம்), எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் 1-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.சுதா, சென்னை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலராகவும், தென்காசி விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி சி.விஜயகுமார், சென்னை உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு 1-வது கூடுதல் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சிபிஐ 8-வது கூடுதல்சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன், தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிற்சி மைய இயக்குநராகவும், சேலம் மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.ராமஜெயம், சென்னைஉயர் நீதிமன்ற பதிவாளராகவும்(சிறப்பு பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி சட்டத்துறை செயலராக இருந்த ஜெ.ஜூலியட் புஷ்பா, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு 1-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த வி.தேன்மொழி, 2-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.