Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்: குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம். (கோப்பு படம்)

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா நாளை (ஏப்.15) கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது கரோனா பரவலால் சித்திரைப் பெருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்களின்றி நடத்தப்பட உள்ளது. இதனால் கோயிலில் குறித்த நேரங்களில் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சுவாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

ஏப்ரல் 15-ம் தேதி காலை காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறும். இதில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 9 வரை, 11.30 முதல் 12.30 வரை. மாலையில் 4 மணி முதல் 5.30 மணி வரை, 7.30 மணி முதல் 9 வரை. ஏப்ரல் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி நேரம்: காலை 6 முதல் 8 வரை, 9 முதல் 12.30 வரை. மாலையில் 4 முதல் 5.30 வரை, 7 மணி முதல் 9 வரை.

ஏப்.22-ல் பட்டாபிஷேகம் அன்று அனுமதி நேரம் காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 முதல் 6.30 மணி வரை. ஏப். 23-ம் தேதி திக்குவிஜயம். அனுமதி நேரம் காலை 6 மணி முதல் 8 மணி வரை, 9 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை.

ஏப்ரல் 24-ம் தேதி திருக்கல்யாணம் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறும். அதைத்தொடர்ந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமணக் கோலத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பின்னர் 3.30 மணி முதல் 5.30 மணி வரை, மாலை 7.30 முதல் 9 வரை.

ஏப்.25-ம் தேதி சட்டத்தேர் காலை 5 மணி முதல் 7 மணிக்குள் நடைபெறும். அனுமதி நேரம் காலை 7 முதல் 12.30 வரை, மாலை 4 முதல் 5.30 வரை, 7.30 முதல் 9 வரை.

ஏப்ரல் 26-ம் தேதி 12-ம் திருநாள் அனுமதி நேரம் காலை 7 முதல் 10.30 வரை, மாலை 4 முதல் 5.30 வரை, இரவு 7.30 முதல் 9 மணி வரை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x