

மதுரை வைகை ஆற்றில் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தில் மிகப் பெரிய பள்ளத்தால் தொடர் விபத்துகள் நடக்கின்றன. இதனால் இப்பாலத்தில் ஓட்டுநர்கள் அச்சத் துடன் வாகனங்களை ஓட்டிச் செல் கின்றனர்.
மதுரை ஓபுளா படித்துறை தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பள்ளம் காரணமாக அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. படம்: ஜி.மூர்த்தி ஓபுளா படித்துறை அருகே வைகை ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. தடுப்புச்சுவர்கூட இல்லாத இப்பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இரவில் வேகமாக வரும் வாகனங்கள் இப்பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. இந்த தரைப்பாலத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது, ஓபுளா படித்துறை தரைப்பாலத்தை இடித்துவிட்டு மேம்பாலம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் ரூ.26 கோடிக்கு டெண்டர் விட்டு பணிக்கான உத்தரவு வழங்க உள்ளது. தேர்தல் வந்ததால் இப்பணி தடைப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் இப்பணி தொடங்கும் என்றனர்.