உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கு: கருணாநிதி, ஸ்டாலின் பெயர் நீக்கம்

உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கு: கருணாநிதி, ஸ்டாலின் பெயர் நீக்கம்
Updated on
1 min read

திமுக உள்கட்சித் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரர்கள் பட்டியலில் இருந்து திமுக தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயர்களை நீக்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக 8-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த குமரன் தாக்கல் செய்த மனுவில், “விதி முறைகளை மீறி 2014-ல் திமுக உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்ட தால், இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இவ்வழக்கில், கருணாநிதி, ஸ்டாலின், சில திமுக நிர்வாகி கள் எதிர் மனுதாரராக சேர்க்கப் பட்டிருந்தனர். இதை எதிர்த்து, திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், “திமுக வின் துணை விதியின்படி கட்சி யின் பொதுச் செயலாளர் மீதுதான் வழக்கு தொடர முடியும். கருணா நிதி, ஸ்டாலின் பெயர் களை நீக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

நீதிபதி ஆர்.சங்கர் பிறப்பித்த உத்தரவில், “பொதுச் செயலாளர் மீதுதான் வழக்கு தொடர முடியும் என்று திமுக கட்சி விதியில் கூறப் பட்டுள்ளது. இவ்வழக்கின் எதிர் மனுதாரர்கள் பட்டியலில் இருந்து கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை நீக்கி உத்தரவிடுகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in