புதுச்சேரியில் புதிதாக 418 பேருக்கு கரோனா; தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது

புதுச்சேரியில் புதிதாக 418 பேருக்கு கரோனா; தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்றுக்கு மூவர் பலியான நிலையில், புதிதாக 418 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கரோனா 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுபற்றி சுகாதாரத் துறைச் செயலர் அருண் கூறுகையில், "புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 982 ஆக உள்ளது. சுகாதாரத் துறையைச் சேர்ந்தோருக்கு 67 நாட்களாகத் தடுப்பூசி போடப்பட்டு இதுவரை 28,959 பேரும், முன்களப் பணியாளர்களுக்கு 55 நாட்கள் தடுப்பூசி போடப்பட்டு இதுவரை 16,644 பேரும், பொதுமக்களுக்கு 39 நாட்களாகத் தடுப்பூசி போடப்பட்டு இதுவரை 61,379 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

புதிதாக 418 பேருக்குத் தொற்று

புதுச்சேரியில் நேற்று 5 ஆயிரத்து 50 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 418 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. 209 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது 565 பேர் தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். புதுவை முழுக்க 2,235 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா தொற்றினால் மூவர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 696 ஆகியுள்ளது" என்று காதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in