அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்துவரும் கோடமழை அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக பல இடங்களிலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முத்ல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், குழித்துறை, உசிலம்பட்டியில் தலா 4 செ.மீ, ஜெயன்கொண்டம், திருபுவனம் தலா 2 செ.மீ, வாலிநோக்கம், பிளவக்கல், கொடைக்கானலில் தலா 2 செ.மீ, ஆண்டிபட்டி, வலங்கைமான், ஆழியார், கெட்டி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ அளவும் மழை பெய்துள்ளது, எனத் தெரிவித்துள்ளது.

கோடை தொடங்கியது முதலே வாட்டி வதைத்த வெயிலுக்கு இடையே இந்த கோடை மழை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in