Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

மக்களிடையே நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்துள்ளதா? - ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை

மக்களிடையே நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் கோவையில் 42 இடங்களில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது.

கோவையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அறிகுறிகளே இல்லா மல்கூட சிலருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்திருக்கலாம். எனவே, மக்களிடையே நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடிவு செய்தது. இதற்காக கோவையில் மட்டும் 42 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் தலா 30 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு மருத்துவ அலுவலர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், கிராமப்புற, நகர்ப்புற செவிலியர், சுகாதார ஆய்வாளர் என 4 பேர் அடங்கிய குழுக்கள் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை யினர் கூறியதாவது: கோவையில் செல்வபுரம், பீளமேடு, ராமநாதபு ரம், சரவணம்பட்டி, மதுக்கரை, மேட்டுப்பாளையம், காரமடை, தாளியூர், பொள்ளாச்சி, ஆனை மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 33 பகுதிகளில் இருந்து தலா 30 பேரிடம்மொத்தம் 990 ரத்த மாதிரிகள் சேகரிக் கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் ஒப்புதலோடு மட்டுமே ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தமாதிரிகளை பரிசோதித்து, மக்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புசக்தி அளவைக் கண்டறிய கோவைரேஸ்கோர்ஸில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் மூலம் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படும். கோவை மட்டுமல்லாது நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளும் இங்குள்ள இயந்திரம் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றன.

பரிசோதனையில் மக்களிடையே எத்தனை சதவீதம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டு, அந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக் கப்படும். அவர்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதி முடிவை வெளியிடுவார்கள். கோவை தவிர சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இதேபோன்று ரத்தப் பரிசோதனை செய்து நோய் எதிர்ப்பு திறனை கண்டறியும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x