வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆற்றுப்படுத்த கலை நிகழ்ச்சி: அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கிவைத்தார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆற்றுப்படுத்த கலை நிகழ்ச்சி: அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆற்றுப்படுத்துவதற்கான கலை நிகழ்ச்சியை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகரில் பெய்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நீண்ட விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை பாதிக் கப்பட்டிருந்தால், அவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சி, தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சி ஆகியவை, சென்னை மாநகராட்சியின் 4-வது வார்டு சார்பில் புதிய வண்ணாரப் பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது, மாநகராட்சியின் 4-வது (தண்டையார்பேட்டை) மண்டல கண்காணிப்பு அலுவல ராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர ரத்னூ நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கலந்தாய்வு ஆகியவை 3 குழுக்கள் மூலம் தண்டையார் பேட்டை, வியாசர்பாடி, கொடுங் கையூர், கொருக்குபேட்டை, ஆர்.கே.நகர், பழைய வண்ணாரப் பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதி களில் உள்ள பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 3 பள்ளிகள் வீதம் 10 நாட்களுக்கு இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in